சென்னை: கோடை முடிந்தும் வெயில் கொளுத்தி எடுக்கிறது. இந்த நேரத்திலும் அதிகளவில் தர்பூசணி பழங்கள் கிடைத்து வருகிறது. அதை வைத்து எப்படி ஐஸ் கிரீம் செய்யலாம் என்று தெரிந்து கொண்டு நீங்களும் செய்து சாப்பிட்டு பாருங்கள்.
தேவையான பொருட்கள்
தர்பூசணி – 1 கப்
சர்க்கரை – தேவையான அளவு
ஃபிரெஷ் கிரீம் – 1 ஸ்பூன்
ரோஸ் எசன்ஸ் – ஒரு துளி
செய்முறை: தர்பூசணியை விதையில்லாமல் எடுத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள். பின் அதில் ஃபிரெஷ் கிரீம் சேர்த்து நன்கு அரையுங்கள். கூடவே ரோஸ் எசன்ஸ் சேர்த்துக் கொள்ளுங்கள்.
சர்க்கரை தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளுங்கள். நன்கு அரைத்து அதை அப்படியே ஒரு கிண்ணத்தில் ஊற்றி ஃபிரீசரில் வையுங்கள். 2 மணி நேரம் கழித்துப் பார்த்தால் கெட்டியான பதத்தில் தர்பூசணி ஐஸ்கிரீம் தயார். எளிமையாகவும், விரைவாகவும் செய்யலாம்.