ஆஸ்திரேலியா: புதிய சட்டம்… வேலை நேரம் முடிந்த பிறகு, ஊழியர்களை தொடர்பு கொண்டால் குற்றம் என்று ஆஸ்திரேலியாவில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
அலுவலக நேரம் தவிர மற்ற நேரங்களில், வேலை தொடர்பான செல்போன் அழைப்புகளுக்கோ, இ-மெயில்களுக்கோ ஊழியர்கள் பதில் அளிக்கத் தேவையில்லை என்ற புதிய சட்டம் ஆஸ்திரேலியாவில் அமலுக்கு வந்துள்ளது.
மேலும், தேவையின்றி ஊழியர்களை தொடர்புகொள்ளும் நிறுவனங்களுக்கு 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை போக்கவே இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பனீஸ் தெரிவித்துள்ளார்.