கோயம்புத்தூர்: காய்கறி மார்க்கெட்டுகளில் விற்பனையாகாத தக்காளிகளை விவசாயிகளில் பலர் கால்நடைகளுக்கு உணவாக போட்டுச் செல்கின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி பகுதிகளில் கூடுதல் விளைச்சல் மற்றும் வெளியூர்களில் இருந்து வரத்து அதிகரிப்பால் மார்க்கெட்டில் தக்காளி விலை ரூ.12 – ரூ.15க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் காய்கறி மார்க்கெட்டுகளில் விற்பனையாகாத தக்காளிகளை விவசாயிகளில் பலர் கால்நடைகளுக்கு உணவாக போட்டுச் செல்கின்றனர். மேலும், அழுகும் பொருட்கள் என்பதால் தக்காளிகளை குப்பையில் கொட்டிவிட்டு செல்வதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.