தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்தது… நடுத்தர மக்கள் மகிழ்ச்சி
சென்னை : சில மாதங்களாக ஆபரண தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று (ஏப்ரல் 22), தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.6,845க்கும், ஒரு சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.54,760க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ89க்கும் ஒரு கிலோ ரூ.89,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நடுத்தர மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.