திருவனந்தபுரம்: சுரேஷ் கோபியின் பிறந்தநாளை முன்னிட்டு மலையாள படமான படக்குழுவினர்டுள்ளனர்.
மலையாளத்தில் சுரேஷ் கோபி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘கருடு’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்துக்குப் பிறகு அவர் நடிக்கும் படம் ‘வராஹம்’.
இப்படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களைத் தவிர நவ்யா நாயர், பிராச்சி தெஹ்லான், ஸ்ரீஜித் ரவி, சந்தோஷ் கீழத்தூர், சாதிக் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தை சனல் வி தேவன் இயக்குகிறார். இப்படத்திற்கு ராகுல் ராஜ் இசையமைக்கிறார். இந்நிலையில், நடிகர் சுரேஷ் கோபியின் பிறந்தநாளையொட்டி, படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
கேரளாவின் முதல் பா.ஜ.க. மக்களவை உறுப்பினராக சுரேஷ் கோபி தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து வெளியான அவரது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.