சென்னை: பல பாரம்பரிய இந்திய உணவுகளில் பயன்படுத்தப்படும் பொதுவான மசாலா ஓமம் ஆகும். இது மூலிகை தேநீர் மற்றும் பக்கோடா, பரோட்டா போன்ற உணவுகளிலும் சேர்க்கப்படுகிறது.
இது ஆயுர்வேத மசாஜ்களிலும் பயன்படுத்தப்படும் பொதுவான மூலப்பொருள் ஆகும். ஓமம் குறிப்பாக ராஜாஸ்தானில் அதிகளவில் விளையக்கூடியது. இது, ஒரு விதை வடிவில் உலர்த்தப்பட்ட தாவரத்தின் பழமாகும். ஆரோக்கிய நன்மைகள் கொட்டிக்கிடக்கும் ஓமத்தின் சிறப்பை காணலாம்:
செரிமானம் பிரச்சினை: தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஓமம் தண்ணீரை குடித்து வந்தால், செரிமான பிரச்சினையை குறைக்கலாம். இரண்டு டீஸ்பூன் வறுத்த ஓமம் விதைகளை, ஒரு கப் நீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். அதனை தண்ணீர் கொதிக்க வைத்து, பின்னர் ஆறவிட்டு குடிக்க வேண்டும். அதிகமாக சாப்பிட்ட பிறகு, இந்த பானத்தை பருகுவது நல்ல சாய்ஸ் ஆகும்.
எடை குறைப்பு: சிறந்த செரிமானமே தேவையற்ற எடை அதிகரிப்பை கட்டுப்படுத்த உதவுகிறது. தினமும் ஒரு கிளாஸ் ஓமம் தண்ணீரை பருகுவது சிறந்த பலனை தரும்.
வீக்கம்: கர்ப்பிணிப் பெண்களுக்கு மலச்சிக்கல் மற்றும் வீக்கம் பொதுவானது ஆகும். அதனை தடுத்திட, ஒரு கிளாஸ் ஓமம் தண்ணீரை கொதிக்க வைத்து பருகினால், அற்புதங்களை உடலில் காணலாம். ஒழுங்கற்ற உணவுப் பழக்கம் மற்றும் ஸ்நாக்ஸ் உட்கொள்வது அமிலத்தன்மையை அதிகரிக்கும். இதனை கட்டுப்படுத்த, ஓமத்தை உங்கள் சாப்பாட்டில் சேர்த்து உட்கொள்ளலாம். அல்லது ஓமம் தண்ணீரை சாப்பாட்டிற்கு பிறகு பருகலாம்.