சென்னை: தவெக தலைவர் விஜய்யின் கொள்கை குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-
தவெக தலைவர் விஜய்க்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சாபமிட்டுள்ளார். விஜய்யும், திமுகவும் கொள்கை தவறிழைத்துவிட்டனர் என்கிறார் சீமான்.
இப்படிப்பட்ட கொள்கை தவறியவர்கள் லாரி விபத்தில் சிக்கினால், எங்களைப் போன்ற பெண்களின் வாழ்க்கையை சீரழித்தவர்களை என்னவென்று சொல்வது? முதலில் அவர் கட்சியில் உள்ள ஓட்டைகளை சரி செய்ய வேண்டும்.
அவரது கட்சியில் ஊழல் அதிகம். தி.மு.க.வும் தவெகவும் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும். ஆனால், தன் வேலையை சரியாக செய்யாமல், விளம்பரம் தேடி அலைபவர். உத்தமர் போல் திட்டாதே. இவ்வாறு அவர் கூறினார்.