சென்னை: நடிகர் விஜய் சிறுவயதில் இருந்தே நடித்து வருபவர். நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் இளைய தளபதி என்று கொண்டாடப்பட்டார். ஒரு கட்டத்தில் ரசிகர்கள் அவரை தளபதி என்றே அழைத்தனர். இந்நிலையில் அவர் தற்போது அரசியலுக்கு வந்துள்ளார். அவரது தவெக கட்சி வரும் 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளது.
அதுதொடர்பான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். கடந்த மாதம் அவர் தனது கட்சியின் முதல் மாநாட்டை பிரமாண்டமாக நடத்தினார். அவரது தாயார் சமீபத்தில் ஒரு பேட்டியில், அவர் எப்போதும் நினைத்ததைச் செய்வதில் உறுதியாக இருப்பதாகக் கூறியிருந்தார். நடிகர் விஜய் அடுத்தடுத்து நடிப்பால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வருகிறார். சிறுவயது முதலே விஜயகாந்த் உள்ளிட்டோருடன் தந்தையின் படங்களில் நடித்துள்ளார்.
ஒரு கட்டத்தில் நாளைய தீர்ப்பு படத்தில் ஹீரோவாக அறிமுகமான விஜய்க்கு துவக்கத்தில் மிக மோசமான கமெண்ட்கள் வந்தன. அதையெல்லாம் தன் சாதனைகளுக்கு படிக்கட்டுகளாக மாற்றினார். இளைய தளபதி என்று கொண்டாடப்படும் இவர் தற்போது தளபதியாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இதையெல்லாம் தாண்டி அரசியல் கட்சியை அறிவித்து அதிரடியை கிளப்பினார்.
கடந்த சில வருடங்களாக தந்தையிடம் மனம் வருந்திய நடிகர் விஜய் தற்போது அவருடன் இணக்கமாக உள்ளார். அவர் தனது பல நேர்காணல்களில் விஜய் பற்றிய மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்கிறார். அந்த வகையில், இயக்குனர் மற்றும் நடிகரான எஸ்.ஏ.சி., விஜய்க்கு கல்லூரி நாட்களில் இருந்தே இருந்த ஒரு ஆசை குறித்து மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். மார்க்கெட்டில் வரும் எந்த காரையும் விஜய் வாங்க அடம்பிடிப்பார் என்று குறிப்பிட்டுள்ளார்.
கல்லூரி நாட்களில் இருந்தே இதை செய்து வருவதாகவும் எஸ்.ஏ.சி. விஜய்க்கு கார் மீது காதல்: அதனால் சென்னை மார்க்கெட்டில் புதிய கார் வந்தால் விஜய்க்கு வாங்கித் தருவதாக கூறினார். முன்னதாக மற்றொரு பேட்டியில் பேசிய எஸ்.ஏ.சி., நடிகர் விஜய் கருவில் இருந்தே நடிக்க தயாராக இருப்பதாக கூறியிருந்தார். விஜய் வயிற்றில் இருக்கும் போது அவரது மனைவி ஷோபா சந்திரசேகர் தினமும் இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார் என்றும், இதனால் விஜய் தினமும் இசை கேட்டு வளர்ந்தவர் என்றும் எஸ்ஏசி பெருமிதம் கொள்கிறார்.