அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து விஸ்தாரா விமானம் டெல்லிக்கு தனது கடைசி பயணத்தை மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து விமான நிலைய ஊழியர்கள் ஒன்றாக நின்று விமானத்திற்கு பிரியாவிடை கொடுத்தனர்.
விஸ்தாரா விமான நிறுவனம் டாடாவின் ஏர் இந்தியா நிறுவனத்துடன் இணைவதற்கான வேலைகளை நடைபெற்று வந்தன. அதற்கான பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் நேற்றிரவு விஸ்தாரா விமானங்கள் அனைத்தும் ஏர்இந்தியா விமானங்களாக சென்றன.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து விஸ்தாரா விமானம் டெல்லிக்கு தனது கடைசி பயணத்தை மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து விமான நிலைய ஸ்டாஃப்கள் ஒன்றாக நின்று விமானத்திற்கு பிரியாவிடை கொடுத்தனர்.
ஏர்இந்தியா-விஸ்தாரா விமான நிறுவனங்கள் இணைந்த பின் முதல் விமானம் தோஹாவில் இருந்து மும்பைக்கு நேற்றிரவு புறப்பட்டது. இரண்டு நிறுவனங்களும் இணைந்த பிறகு முதல் சர்வதேச விமான சேவை இதுவாகும்.