சென்னை: தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து சினிமாவில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர் ஸ்ருதிஹாசன். ‘ஏழாம் அறிவு‘ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான இவர், அதன் பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ‘3’ படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்நிலையில், ‘3’ படத்திற்கு பிறகு தனது திரையுலக வாழ்க்கை எப்படி இருந்தது என்று ஒரு பேட்டியில் ஸ்ருதிஹாசன் பகிர்ந்துள்ளார். அதில் 3 படத்தில் நடித்து முடித்த பிறகு 2 வருடங்களாக பட வாய்ப்புகள் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டேன். அதன்பிறகு ஜனனியின் கேரக்டரை மக்கள் எந்தளவுக்கு ரசித்தார்கள் என்பது படத்தின் மறுவெளியீட்டுக்குப் பிறகுதான் தெரிந்தது. இருந்தாலும் தமிழ் படங்களில் நடிப்பதை கைவிட மாட்டேன்.
இப்போதும் ஒரு படத்தில் நடிக்கிறேன் என்றார். தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘கூலி’ படத்தில் ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.