ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன் பாபர் அசாம் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் 37 ரன்களைக் கடந்த போது, டி20 சர்வதேசப் போட்டிகளில் அதிக ரன் குவித்த இரண்டாவது வீரராக இந்தியாவின் விராட் கோலியை (4,188) பின்னுக்குத் தள்ளினார்.
30 வயதான பாபர் அசாம் 119 டி20 போட்டிகளில் 4,192 ரன்கள் குவித்துள்ளார். இந்த பிரிவில் ரோகித் சர்மா 4,231 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார். ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடிக்க பாபர் அசாம் இன்னும் 40 ரன்கள் தேவை.