திருச்செந்தூர்: திருச்செந்தூர் கடற்கரைப் பகுதியில் மாடுகள் மற்றும் நாய்களால் அதிக தொல்லை ஏற்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரைப் பகுதியில் ஏராளமான எருமை மற்றும் பசு மாடுகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருவதாகக் கூறப்படுகிறது.
நாய்களின் தொல்லையும் அதிகமாக உள்ளதாகவும், மாவட்ட மற்றும் கோவில் நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படியும் பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.