சேலம்: சேலத்தில் 30க்கும் மேற்பட்ட கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு 10 கிலோ குட்கா போதை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி நகர பகுதிகளில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் 30க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை செய்து, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 10 கிலோ குட்கா போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
தற்காலிகமாக 3 கடைகளை பூட்டிய அதிகாரிகள், தலா 25 ஆயிரம் வீதம் மொத்தம் 75 ஆயிரம் அபராதம் விதித்தனர். திங்களன்று திரையரங்கம் முன் ஹான்ஸ் பாக்கெட்களுடன் சிறுவர்கள் 3 பேர் மயங்கி கிடந்த செய்தி வெளியானதன் எதிரொலியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.