சென்னை: வங்க கடலில் புயல் உருவாகுவது எப்போது? என்று வானிலை மையம் விளக்கம் அளித்துள்ளது.
வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் 28ம் தேதி மாலை முதல் 29-ம் தேதி காலைக்குள் பெங்கல் புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பின்னர், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழகம், புதுச்சேரி கடலோரப்பகுதிகளில், காரைக்காலுக்கும் -மாமல்லபுரத்திற்கும் இடையே 30-ஆம் தேதி காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து கரையைக் கடக்கக்கூடுமென வானிலை மையம் கணித்துள்ளது.