ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டத்தில் உரங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் பயிர்களைக் காப்பாற்ற முடியாத நிலை உருவாகி உள்ளது என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.;
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் யூரியா உள்ளிட்ட உரங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நடவு செய்து 20 முதல் 30 நாள்கள் ஆன நிலையில் உரமிட வேண்டிய நிலையில் போதுமான உரம் கிடைக்காமல் பயிர்களைக் காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். தட்டுப்பாடு காரணமாக, உரங்களின் விலையும் உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
வரத்து குறைவாக உள்ளதால் உரங்களை விவசாயிகளுக்குப் பிரித்து வழங்குவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.