திருப்பூர்: காங்கேயம் நகர் பகுதியில் உணவகங்களில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து கெட்டுப்போன இறைச்சிகளை பறிமுதல் செய்து அழித்தனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகர்ப் பகுதியில் உள்ள பேக்கரி, சைவ, அசைவ உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், காலாவதியான பொருள்கள், கெட்டுப்போன இறைச்சி உள்ளிட்டவற்றை அவர்கள் பறிமுதல் செய்து அழித்தனர். 6 கடைகளுக்கு 11 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.