சென்னை: கோல்டன் மில்க் என்று எதை அழைப்பார்கள் தெரியுங்களா. மஞ்சள் பால்- தான் அப்படி அழைக்கப்படுகிறது. காரணம் உடலில் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கும் தன்மை கொண்டதால். உடல் ஆரோக்கியம் மேம்பட செய்கிறது. சரிங்க… இந்த கோல்டன் பாலை எப்படி செய்வது. அதன் பயன்கள் என்ன. தெரிந்து கொள்ளுங்கள்.
பாலில் அதிகளவில் கால்சியம் சத்து உள்ளது. அதேபோல், மஞ்சள் சிறந்த நச்சு நீக்கியாக செயல்படுகிறது. அதிலும் குறிப்பாக மஞ்சள் நம் உடலில் நோய் எதிர்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் சளி, இருமல் போன்ற நோய்கள் ஏற்படும் போது பாலில் மஞ்சள் சேர்த்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
அதே போல் உடலில் ஏதேனும் தொற்று பாதிப்பு ஏற்பட்டாலும் இந்த மஞ்சள் பாலை குடித்து வந்தால் தொற்றை எதிர்த்து போராடும் ஆற்றலை அதிகரிக்கிறது.
yellow milk,peanuts,pepper,ginger ,மஞ்சள் பால், பட்டைப்பொடி, மிளகு, இஞ்சி
கோல்டன் மில்க் செய்ய தேவையான பொருட்கள்:
பால் – 120 மில்லி
மஞ்சள் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி – சிறிதளவு
மிளகு தூள் – 1 சிட்டிகை
பட்டைப்பொடி – 1 சிட்டிகை
தேன் – 1 டீஸ்பூன்
செய்முறை: பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பாலை ஊற்றி கொதிக்க விட வேண்டும். அதன் பிறகு இஞ்சி, மஞ்சள் தூள், பட்டைப்பொடி, மிளகு ஆகிய நான்கையும் சேர்க்க வேண்டும்.
அதன் பிறகு மஞ்சள் வாசனை போகிற அளவிற்கு நன்கு கொதிக்கவைத்து இறக்கி விட வேண்டும். பிறகு அதை வடிகட்டி தேன் சேர்த்து கலந்து விட வேண்டும். செய்வதற்கு எளிமையாக இருந்தாலும் அபார பலன்களை கொண்டதுதான் கோல்டன் மில்க் என்று அழைக்கப்படும் மஞ்சள் பால்.