புதுடெல்லி: மத்திய பட்ஜெட் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை விவசாயிகள் பிரதிநிதிகளுடன் அமைச்சர் கூட்டம் நடத்தினார்.
கூட்டத்தில் பேசிய பாரதிய கிசான் சங்கத்தின் பொதுச்செயலாளர் பத்ரி நாராயண் சவுத்ரி, “பி.எம். கிசான் திட்ட பலன்களை அதிகரிக்க வேண்டும்” என்றார். பாரதீய கிசான் யூனியன் தேசிய செய்தி தொடர்பாளர் தர்மேந்திர மாலிக், “தீவனம், உரம், விதைகள், உபகரணங்கள், மருந்துகள் உள்ளிட்ட அனைத்து விவசாய பொருட்களுக்கும் ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.