சென்னை: பீட்ரூட் இரத்த சோகைப் பிரச்சினையினை முற்றிலும் குணப்படுத்தும் தன்மை கொண்டது. இது உடலில் உள்ள இரத்த அணுக்களின் எண்ணிக்கையினை அதிகரிக்கச் செய்கின்றது. பீட்ரூட்டில் ஜூஸ் செய்வது சாப்பிடுவதால் ஆரோக்கியம் உயரும்.
தேவையானவை:
பீட்ரூட் – 1,
இஞ்சி – 1/4 இன்ச்
ஐஸ் கட்டிகள் – 2
சர்க்கரை – தேவையான அளவு
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
செய்முறை: பீட்ரூட்டினை தோல் சீவி, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அடுத்து பீட்ரூட்டை மிக்ஸியில் போட்டு சர்க்கரை, இஞ்சி மற்றும் தண்ணீர் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.
அடுத்து இதனை வடிகட்டியால் வடிகட்டி, பீட்ரூட் சாறு, எலுமிச்சை சாறு, ஐஸ்கட்டி சேர்த்துக் குடித்தால் பீட்ரூட் ஜூஸ் ரெடி.