நாமக்கல்: நாமக்கல்லில் இருந்து கப்பல் மூலம் ஓமன் நாட்டுக்கு அனுப்பப்பட்ட ரூ. 15 கோடி மதிப்பிலான 2 கோடி முட்டைகள் அந்நாட்டு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. எடை குறைந்ததால் முட்டைகளை இறக்க அனுமதி வழங்கப்படவில்லை. இதுகுறித்து எம்.பி.க்கள் ராஜேஷ்குமார், மாதேஸ்வரன் ஆகியோர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
நாமக்கல் முட்டை ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் நிர்வாகிகள் ஓமன் சென்று அந்நாட்டு அதிகாரிகளை சந்தித்தனர். இந்நிலையில் நேற்று துறைமுகத்தில் 41 கன்டெய்னர் முட்டைகளை இறக்க ஓமன் அதிகாரிகள் அனுமதித்தனர். இதனால் ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கால்நடை பண்ணையாளர்கள், விவசாயிகள், வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் செந்தில் கூறியதாவது: இம்மாத இறுதிக்குள் ஓமன் நாட்டுக்கு வரும் இந்திய முட்டைகளை இறக்க அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.