சென்னை: நடிகர் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படம் சென்சார் ஆகி உள்ளது. இந்நிலையில் படம் எப்போது ரிலீஸ் என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென எதிர்பாராத காரணத்தினால் பொங்கல் ரிலீஸ் இல்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் சென்சார் அப்டேட் வெளியாகி உள்ள நிலையில் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘விடாமுயற்சி’ படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு ’யூஏ’ சான்றிதழ் வழங்கி உள்ளனர். மேலும் இந்த படம் 2 மணி நேரம் 30 நிமிடங்கள் ரன்னிங் டைமிங் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் இடம்பெற்ற சில வார்த்தைகள் மட்டும் மியூட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் இந்த படம் வரும் ஜனவரி 30ம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. ரிலீஸ் செய்து குறித்து அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் விரைவில் வெளியீடும் என்றும் கூறப்பட்டு வருகிறது.