சிட்னி: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் சின்னர் 6-3, 6-4, 6-2 என்ற செட்களில் வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதற்கிடையே, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் 3வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீரரும், இத்தாலியைச் சேர்ந்தவருமான ஜானிக் சின்னர், அமெரிக்காவின் மார்கஸ் உடன் மோதினார்.
இதில் சின்னர் 6-3, 6-4, 6-2 என்ற செட்களில் வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் டென்மார்க்கின் ஹோல்ஜர் ரூனே 6-7 (5-7), 6-3, 4-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் செர்பிய வீரர் மியோமிரை வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.