வாஷிங்டன்: அமெரிக்காவின் அதிபரான பிறகு என்னென்ன திட்டங்களை செயல்படுத்தப் போகிறார் என்று டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் இன்று அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்கிறார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அமெரிக்க சட்டத்தின்படி, துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜே.டி. வான்ஸ் முதலில் பதவியேற்பார். அவருக்குப் பிறகு டிரம்ப் அதிபராக பதவியேற்பார்.
வெள்ளை மாளிகையில் தனது முதல் நாள் குறித்து டொனால்ட் டிரம்ப் கூறினார்: சட்டவிரோத எல்லை மீறல்கள் அனைத்தையும் முடிவுக்குக் கொண்டுவருவேன். தேசிய எல்லையில் தேசிய அவசரநிலையை அறிவிப்பேன். தெற்கு எல்லையை பாதுகாக்க இராணுவத்திற்கு உத்தரவிடுவேன்.
அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படும். இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 10 சதவீத வரி, கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து வரும் பொருட்களுக்கு 25 சதவீதம் மற்றும் சீனாவிலிருந்து வரும் பொருட்களுக்கு 60 சதவீதம் வரி விதிக்கப்படும். ‘டிக் டாக்’ செயலியை நிறுவனங்கள் தடுக்க வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
சட்டத்தின் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருவதற்கு முன் காலத்தை நீட்டிக்க நிர்வாக உத்தரவை பிறப்பிப்பேன். நமது தேசிய பாதுகாப்பைப் பாதுகாக்க நாம் ஒரு ஒப்பந்தம் செய்யலாம். அமெரிக்காவில் டிக் டாக் செயலி மீதான தடையை நீக்குவேன் என்று அவர் கூறினார். டிக் டாக் செயலியை தடை செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டிரம்ப் தடையை நீக்குவதாக அறிவித்திருப்பது ஆச்சரியமளிக்கிறது.