சென்னை: தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியாவில் ஓரிரு நாட்களில் வடகிழக்கு பருவமழை விலக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:- தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியாவில் ஓரிரு நாளில் வடகிழக்கு பருவமழை வாபஸ் பெற வாய்ப்புள்ளது.
தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 28-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும். காலையில் லேசான மூடுபனி காணப்படும். வரும் 29-ம் தேதி தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
30 மற்றும் 31-ம் தேதிகளில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. 30-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், 31-ம் தேதி கோவை மாவட்டம், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களின் மலைப்பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.