சென்னை : ‘யானை பசிக்கு சோளப்பொறி’ போல் உள்ளது மத்திய அரசின் பட்ஜெட் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
2025-26ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திறய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். இதுகுறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளதாவது:
“தமிழ்நாட்டில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவிக்கப்படாதது ஏமாற்றம். இந்த பட்ஜெட் ‘யானை பசிக்கு சோளப்பொறி’ என்ற பழமொழிக்கு ஏற்ப அமைந்துள்ளது” என்றார்.
இதேபோல் மத்திய பட்ஜெட்டை கண்டித்து விவசாயிகள் மற்றும் விவசாய சங்க தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.