சென்னை : மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அண்மைக் காலமாக, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை இலங்கை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
மீன்பிடித்தல் தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையே 2008ம் ஆண்டு செய்த ஒப்பந்தத்தின் உணர்வை இலங்கை அரசு அலட்சியம் செய்கிறது. இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதியுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்