புதுடில்லி: செல்போனால் பரவும் நோய் பற்றி தெரியுங்களா. இந்த நோயால் 2 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நோமோபோபியா என்ற நிலைமை தற்போது மக்களிடம் அதிகமாக பரவி வருகிறது. சிறு வயதில் ஒரு குழந்தையால் பொம்மைகள் இல்லாமல் இருக்க முடியாது.
அப்படி தான், வளர்ந்த பிறகு மனிதர்கள் செல் போனுக்கு அடிமையாகி விட்டார்கள். எந்த ஒரு தேவை இல்லை என்ற போதிலும், சராசரியாக ஒவ்வொரு 6 நிமிடத்திற்கு ஒரு முறை, போனை எடுத்து எடுத்து பார்க்கிறோம். இந்த பிரச்னையால் எல்லோருமே தெரிந்தோ, தெரியாமலோ பாதிக்கப்பட்டுள்ளோம். இவ்வாறு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தேவைப்படும் பொழுது மட்டும் செல்போனை பயன்படுத்திவிட்டு பின்னர் அது பற்றிய நினைவில் இல்லாமல் இருப்பதே சிறந்தது எனவும் கூறுகின்றனர்.