சென்னை: சூரிய நமஸ்காரம் என்பது ஒருவகை உடற்பயிற்சி ஆகும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதன் மூலம் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.சருமம் பொலிவாக இருக்கும் வயதாவதால் ஏற்படும் சுருக்கங்களை தடுக்க சூரிய நமஸ்காரம் உதவுகிறது.
சரியான முறையில் சூரிய நமஸ்காரம் செய்து ஒரு நாளைத் தொடங்கினால் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும். தினமும் 5 முதல்10 நிமிடங்கள் சூரிய நமஸ்காரம் செய்த பிறகு வேறு எந்த ஆசனமும் செய்ய வேண்டியதில்லை.
உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சூரிய நமஸ்காரத்தை தவறாமல் செய்யுங்கள். உங்கள் மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். உடல் முன்னோக்கி வளைவதன் மூலம் வயிற்றை ஆரோக்கியமாக வைக்க முடியும். உங்களுக்கு வாயு பிரச்சனை, மலச்சிக்கல் பிரச்சனை சிராகும்.
தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதால் செரிமான அமைப்பு சீராக உதவுகிறது. செரிமான அமைப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. இது குடல்களின் செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது.
மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை மேம்படுத்த இது உதவியாக இருக்கும். சூரிய நமஸ்காரம் செய்வதால் உடலினுள் சுரக்கப்படும் சுரப்பிகளின் செயல்பாட்டை இயல்பாக்குகிறது. உங்கள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்பினால், சூரிய நமஸ்காரத்தை தவறாமல் செய்ய வேண்டும். மட்டுமல்லாமல் உங்கள் மன ஆரோக்கியத்தையும் தைரியத்தையும் மனவலிமையையும் ஏற்படுத்தும். கவலையிலிருந்து விடுபடவும் உதவுகிறது.
நீங்கள் தினமும் அதிகாலையில் எழுந்து சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். இது உடல், மன வலிக்கு நிவாரணம் அளிப்பது மட்டுமின்றி இரத்த ஓட்டத்தையும் சீராக்கும்.