ராமேஸ்வரம் : எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் மீண்டும் தொடர்வதால் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
5 விசைப்படகுகள், மீன்கள், வலைகளை பறிமுதல் செய்த கடற்படையினர் அவர்களை தலைமன்னார் கடற்கரை முகாமுக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்த மாதத்தில் 29 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது கவனிக்கத்தக்கது. இதைத் தடுக்க தீர்வு தான் என்ன? என்று மீனவர்கள் தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.