சென்னை : தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடுகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழகத்தின் மாநில விலங்கு வரையாடு(Nilgiri Tahr) தான். பல்லுயிர் பெருக்க மண்டலமான மேற்குத் தொடர்ச்சி மலையில், தமிழக – கேரள வனப்பகுதிகளில் இவை வாழ்கின்றன.
சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணியிலும் குறிப்பிடப்பட்ட வரையாடுகளை பாதுகாக்க, கடந்த 2023ல் அரசு சிறப்புத் திட்டத்தை அறிமுகம் செய்தது. இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் வரையாடுகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக வனத்துறை தெரிவித்துள்ளது.
இந்த வரையாடுகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என்ற தகவல் மக்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.