அசாம்: அசாமில் ஏற்பட்ட நிலநடுக்கம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் மையமானது தரைமட்டத்தில் இருந்து சுமார் 16 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக வங்கக்கடலில் நேற்று முன்தினம் அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலநடுக்கம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.