தேவையான பொருட்கள் :
வேகவைத்த அல்லது நறுக்கிய மாங்காய் துண்டுகளை அரை கப் எடுத்துக் கொள்ளவும், அரை கப் தேங்காய் துருவல், நான்கு பச்சை மிளகாய், 1 ஸ்பூன் பருப்பு, 1 ஸ்பூன் கடுகு, கறிவேப்பிலை, 5 சிவப்பு மிளகாய், பெருங்காயம், தேங்காய் எண்ணெய் மற்றும் உப்பு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும்.
செய்யும் முறை:
இப்போது மிக்ஸி ஜாரில் வேகவைத்த அல்லது நறுக்கிய மாங்காய் துண்டுகள், தேங்காய் துருவல், பச்சை மிளகாய், தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொண்டு, தனியாக ஒரு கிண்ணத்தில் அந்த பேஸ்ட்டை எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு கடாயில் தேங்காய் எண்ணையை ஊற்றி அதில் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு ஆகியவற்றை தாளித்து, கிண்ணத்தில் கலந்து வைத்த பேஸ்ட்டில் சேர்த்து நன்றாக கலக்கவும். சுவையான மாங்காய் சட்னி ரெடி.