கேரளா: கேரளாவில் கோவில் திருவிழாவில் கட்சி கொடி பறக்க விடப்பட்ட சம்பவம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன.
கேரளாவில் கோவில் திருவிழாவின் போது கட்சிக் கொடி பறக்கவிடப்பட்ட சம்பவத்தில் விசாரணை நடத்த திருவிதாங்கூர் தேவசம் உத்தரவிட்டுள்ளது.
கொல்லத்தில் உள்ள தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோயிலில் சிபிஎம் கட்சி கொடி பறக்கவிடப்பட்டு இருந்ததாக புகார் எழுந்திருந்தது. கேரளாவில் கோவிலுக்குள் அரசியல் கட்சிகளின் கொடிகள், சின்னங்களை காட்சிப்படுத்த நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்நிலையில், தற்போது இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.