இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:- தமிழகத்தின் சில பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 23-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 21-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சாதாரணமாக இருக்கும்.
அதிகரிக்க வாய்ப்பில்லை நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 5 செ.மீ., திருச்சி மாவட்டம் தென்பரநாடு, நீலகிரி மாவட்டம் வின்ட்வொர்த் எஸ்டேட்டில் 2 செ.மீ., விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 2 செ.மீ., சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் 1 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

சமவெளிப் பகுதியில் அதிகபட்சமாக வேலூரில் 99 டிகிரியும், குறைந்தபட்சமாக கரூர் பரமத்தியில் 71 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவாகும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பே இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.