தேவையான பொருட்கள் :
மாங்காய் – 1.
துருவிய தேங்காய் – 1/2 கப்.
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்.
உப்பு – 1 ஸ்பூன்.
சிவப்பு மிளகாய் தூள் – 2 ஸ்பூன்.
சீரகம் – 2 ஸ்பூன்.
எண்ணெய் – 2 ஸ்பூன்.
கடலை பருப்பு – 1 ஸ்பூன்.
உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்.
கடுகு – 1/2 ஸ்பூன்.
சிவப்பு மிளகாய் – 5
பெருங்காய தூள் – 1/2 ஸ்பூன்.
கறிவேப்பிலை – சிறிது.
செய்முறை :
முதலில், மாங்காயை நன்றாக கழுவி தோலை உரித்து துண்டுகளாக நறுக்கி தனியே வைக்கவும். அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் மாங்காய் துண்டுகள், துருவிய தேங்காய், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். இப்போது, தாளிக்க கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும், எண்ணெய் காய்ந்ததும், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம், கடுகு சேர்த்து சேர்க்கவும். கடுகு வெடிக்க ஆரம்பித்தவுடன், சிவப்பு மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காய தூள் சேர்த்து கலந்து விடவும். பின்பு தாளித்ததை துவையலுடன் சேர்த்தால், சுவையான தேங்காய் மாங்காய் துவையல் ரெடி.