சென்னை : சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடன் வழங்கும் திட்டத்திற்கு எதிர்ப்பலைகள் தொடர்ந்து எழுந்தன. இந்நிலையில் விவசாயிகளுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் சிபில் ஸ்கோர் அவசியமில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சிபில் ஸ்கோர் அடிப்படையில் விவசாயிகளுக்கு கடன் வழங்கும் திட்டத்திற்கு வேளாண் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். திமுக கூட்டணி கட்சிகளும் கடும் ஆட்சேபம் தெரிவித்தன. இந்த திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் விவசாய சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தின.
இதைத் தொடர்ந்து சிபில் அடிப்படையில் கடன் தர அறிவுறுத்தவில்லை என்றும், கடன் நிலுவை இல்லை என்பதை உறுதி செய்யவே ஸ்பில் ஸ்கோர் பார்க்கப்படும் என்றும் கூட்டுறவுத் துறை விளக்கமளித்துள்ளது. இதனால் விவசாயிகள் நிம்மதியடைந்துள்ளனர். இருப்பினும் இதனை முழுமையாக அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.