பழனி : சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
முருகனின் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் சித்திரை முதல் நாளை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்துள்ளனர்.
அதிகப்படியான பக்தர்கள் வருகையால் மூன்றில் இருந்து நான்கு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும் பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கோயில் நிர்வாகம் சார்பில் மலை ஏறவும், இறங்கவும் ஒருவழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.