உத்திரபிரதேசம் : உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடந்து வரும் மகாகும்பமேளாவில் மூத்த குடிமக்கள் புனித நீராட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளா கடந்த ஜனவரி 14ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கும்பமேளா வருகிற 26ம் தேதி வரை நடைபெற உள்ளது..
இந்நிலையில் உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுகின்றனர். கும்பமேளா முடிவில் 2000 மூத்த குடிமக்கள் புனித நீராடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்த திரிவேணி சங்கமத்தில் பூட்டான் அரசரும் புனித நீராடினார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒன்னாம் தேதி மட்டும் ஒரே நாளில் ஒரு கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்.