சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் அக்டோபர் 15-ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது.
ரஜினிகாந்துடன் மோகன்லால், சிவராஜ்குமார், விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, வித்யா பாலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.
