நடிகர் சூர்யாவின் திரைப்பயணத்தில் 2026-ம் ஆண்டு மறக்க முடியாத ஆண்டாக மாறியுள்ளது. இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் வெளியான ‘சீன்’ திரைப்படம் ரூ.200 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
ஏற்கெனவே இந்த ஆண்டில் வெளியான ‘கருப்பு’, ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ ஆகிய படங்களும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருந்தன. தற்போது ‘சீன்’ திரைப்படமும் இந்த வெற்றிப் பட்டியலில் இணைந்துள்ளது.

இதன் மூலம் ஒரே ஆண்டில் மூன்று திரைப்படங்கள் ரூ.200 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்ற முதல் தமிழ் நடிகர் என்ற சாதனையை சூர்யா படைத்துள்ளதாக சினிமா எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தப் படத்தில் சூர்யாவுடன் நஸ்ரியா நசிம், நஸ்லென் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். காவல் அதிகாரி விசாரிக்கும் மர்மக் கொலை வழக்கை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. குறிப்பாக நஸ்ரியாவின் வித்தியாசமான கதாபாத்திரமும், சண்டைக் காட்சிகளும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
