சென்னை: மனத்தி கணேசனின் உடற்பயிற்சி ஆசிரியரை சந்தித்து மாலை அணிவித்து இயக்குநர் மாரி செல்வராஜ் மரியாதை செய்துள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் ‘பைசன்’. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தீபாவளியை முன்னிட்டு அண்மையில் வெளியான இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், முன்னாள் கபடி வீரர் மனத்தி கணேசனின் உடற்பயிற்சி ஆசிரியர் தங்கராஜ் அவர்களை சந்தித்து இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் மனத்தி கணேசன் ஆகியோர் மரியாதை செய்தனர்.
இதுகுறித்து மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அண்ணன் மனத்தி கணேசன் அவர்களின் பெருங்கனவுக்கு முதல் ஒளி ஏற்றிய பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் மெஞ்சனாபுரம் தங்கராஜ் சார் (சந்தனராஜ்) அவர்களை சந்தித்து என் மரியாதையையும் பெரு நன்றியையும் சமர்ப்பித்தேன்” என்று தெரிவித்தார்.