‘சென்னை : நடிகர் சிலம்பரசன் நடிக்கும் 50 வது படத்தை அவரே தயாரிக்கிறார்.. ஓடிடி நிறுவனங்கள் கொடுத்த நெருக்கடிதான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.
தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு தனது 50வது படத்தில் நடிக்க உள்ளார். தற்காலிகமாக இதற்கு ‘எஸ்டிஆர்50’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த படம் குறித்து பேசி உள்ள சிம்பு, “இது ‘பாகுபலி’ போன்று இருக்காது. ஆனால் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும். ஓடிடி நிறுவனங்கள் கொடுத்த நெருக்கடி காரணமாக இந்தப் படத்தை நானே தயாரிக்க தொடங்கி விட்டேன்” என்று கூறியுள்ளார்.
இந்த அறிவிப்பு வெளியான முதல் சிம்புவின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும் சிம்புவின் படத்தை தயாரிப்பதால் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.