சென்னை: பெண்களை அடிக்க யாருக்கும் உரிமை கிடையாது என்று நடிகை லட்சுமி மஞ்சு அதிரடியாக தெரிவித்துள்ளார்.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் மோகன்பாபுவின் மகளும், நடிகையுமான லட்சுமி மஞ்சு தெலுங்கு, இந்தி மொழிகளில் ஏராளமான படங்கள் நடித்துள்ளார். தமிழில் ‘கடல்’, ‘காற்றின் மொழி’, ‘இஞ்சி இடுப்பழகி’, ‘பூக்கி’ படங்களில் நடித்துள்ளார்.
இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற லட்சுமி மஞ்சு பேசியது கவனம் ஈர்த்துள்ளது. அதில், “நான் ஆணாதிக்கத்தை பொறுத்துக்கொள்ளவே மாட்டேன். திருமணம் என்ற அழகிய பந்தத்தில் ஒருவர் சரியில்லை என்றாலும் அந்த உறவு அர்த்தமற்றதாகி விடும். கணவனின் அடக்குமுறைகளை சகித்து வாழ்வது என்பது அவரவர் விருப்பம். அவர்களிடம் சொல்லிக்கொள்வது ஒன்றுதான். யாரும் நம்மை அடிக்க உரிமை கிடையாது. சுயமரியாதை நமக்கு முக்கியம்.
ஒருகாலத்தில் காதலை பெற்றோரிடம் சொல்லவே பயந்தோம். இன்றைக்கு ‘நான் ஒருவருடன் உறவில் இருக்கிறேன்’ என்று கூறும் நிலை வந்திருக்கிறது. சமூக வலைதளங்கள் நம் மனதை அசைத்து பார்த்துவிட்டன.
தனக்கு பிடித்த பெண்ணை காதலிக்க ஒரு ஆண் பல்வேறு முயற்சிகளை செய்வார். ஆனால் இன்று ஒரு பெண்ணுக்கு அனுப்ப வேண்டிய எஸ்.எம்.எஸ்-ஐ பலருக்கும் காப்பி செய்து அனுப்புகிறேன். உலகம் நிறைய மாறிவிட்டது. இதுபோன்ற ஆசாமிகளை கண்டறிவது பெண்களின் பொறுப்பு தான் என கூறினார்.
கேரளாவில் இதுபோன்ற சிக்கலில் சிக்கி பலர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். மலையாள நடிகையான ரேகா ரதீஷ், சின்னத்திரை தாண்டி வெள்ளித்திரையிலும் கலக்கி வருகிறார். இதற்கிடையில் அவர் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஒரு வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த வீடியோவில் அவர் கண்ணீர் மல்க பேசும்போது, “கடந்த சில மாதங்களாகவே படவாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறேன். எனக்கு பள்ளிக்கூடம் செல்லும் மகனும் உள்ளான். இதற்கிடையில் யூ-டியூபர்கள் சிலர் என்னை பற்றி தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார்கள். இதனால் கடும் மன அழுத்தத்தில் இருக்கிறேன்.
கேரளாவில் இதுபோன்ற சிக்கலில் சிக்கி பலர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். என் மகனுக்காக மட்டுமே வாழ்ந்து வரும் எனக்கு இது போன்ற மன அழுத்தங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எனக்கு ஏதாவது ஒன்று நடந்தால் அந்த யூ-டியூபர்கள் தான் காரணம். அவர்கள் மீது கேரள மாநில அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்”. என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ குறித்து காவல்துறை உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.