தொடர்ந்து வளர்ந்து வரும் தமிழ் சினிமா நடிகைகளில் வாணி போஜன் தனக்கென ஒரு தனித்த இடத்தைப் பிடித்துள்ளார். தனது திரையுலக பயணத்தை மாடலிங் வாயிலாக தொடங்கி சீரியல் உலகுக்குள் நுழைந்தார். அதன் தொடர்ச்சியாக சன் டிவியில் ஒளிபரப்பான “தெய்வமகள்” என்ற சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார். சிறந்த நடித்துத்திறமையால் ரசிகர்களிடையே “சின்னத்திரை நயன்தாரா” என அழைக்கப்பட்டார்.

தெய்வமகளின் வெற்றிக்கு பிறகு, வெள்ளித்திரையின் வாய்ப்பு அவரைத் தேடிவந்தது. அசோக் செல்வனுடன் இணைந்து நடித்த ‘ஓ மை கடவுளே’ திரைப்படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்த அவர், தனது அழகு மற்றும் இயல்பான நடிப்பால் ரசிகர்கள் மனதில் உறுதியான இடம் பெற்றார். அந்தப் படம் வெற்றி பெற்றதும், மகான், மிரள், லவ் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தார். இவை அனைத்தும் அவரது திரைபயணத்தை மேம்படுத்தியுள்ளன.
வாணி போஜன் தற்போது தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகிலும் தனது நடிப்பால் ரசிகர்களை ஈர்த்துவருகிறார். அவரின் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ச்சியாக புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களுடன் நெருக்கமாக இருக்கிறார். அவ்வப்போது வெளியிடும் கியூட் ஃபோட்டோஷூட்கள், பார்டி லுக்குகள் உள்ளிட்டவை தொடர்ந்து இணையத்தில் டிரெண்டாகின்றன.
சமீபத்தில் சேலையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் வாணி. அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே பரபரப்பாக பரவி வைரலாகியுள்ளன. அவரின் அழகு, பாசித்தனம், மற்றும் எளிமையான சேலை லுக்கே இப்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.