சென்னை : லண்டன் சென்று சிம்பொனி அரங்கேற்றிய இசையமைப்பாளர் இளையராஜாவை இயக்குனர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
லண்டனில் சிம்பொனியை அரங்கேற்றிய இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
பிரதமர் மோடியும், இளையராஜாவை அழைத்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருப்பதாக பாராட்டினார். நாடாளுமன்றத்திலும் அவருக்கு புகழ் சூட்டப்பட்டது.
இந்நிலையில் இயக்குனர்கள் பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார், ஆர்.வி.உதயகுமார், பேரரசு ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் இளையராஜாவை நேரில் சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்து கூறினர்.