தேவையான பொருட்கள் :
3 போர்பன் பிஸ்கட் பாக்கெட்
பால் 100மிலி
2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை
2 டேபிள் ஸ்பூன் நெய்
1/4 டீஸ்பூன் பேக்கிங் சோடா
2 முட்டை
1 டெய்ரி மில்க் சாக்லேட்
செய்முறை :
முதலில் போர்பன் பிஸ்கட் பிரித்து அதில் இருக்கும் கிரீமை தனியே எடுத்து பிஸ்கட் மட்டும் மிக்ஸியில் அடித்து பொடித்துக் கொள்ளவும். அப்படி இல்லை என்றால் ஏதாவது ஒரு சால்டெல் பிஸ்கட் இருந்தாலும் ஓகேதான்.. இதனுடன் பேக்கிங் சோடா சேர்த்துக் கொள்ளவும். இட்லி மாவு பதத்திற்கு தேவையான அளவு பால் கொஞ்சம் ஊற்றி கரைத்துக் கொள்ளவும். இந்த கரைசலில் 2 முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து கலக்கி விட வேண்டும்.. இதனால் பணியாரம் நல்லா சாஃப்டாக வரும்.
பின்னர் பிஸ்கட் உள்ளிந்த அந்த க்ரீம் உடன் ஒரு சிறிய டைரி மில்க் சாக்லெட்டை சேர்த்து உருண்டைகளாக பிடித்து குட்டி குட்டி சாக்லேட் லட்டு போல சாக்லேட் உருண்டைகள் செய்யவும்.
இப்போது ஒரு பணியாரக் கல்லில் நெய் ஊற்றி பிஸ்கட் கலவையை சிறிது சேர்த்து சாக்லேட் உருண்டை சேர்த்து மேலே திரும்பவும் அந்த பிஸ்கட் கலவையை சேர்க்கவும். 5 முதல் 10 நிமிடம் கழித்து எப்போதும் பணியாரம் திருப்புவது போல திருப்பிப் எடுக்கலாம். அதிகமாக அனலில் வைக்காமல் சிமிலில் வைத்து பணியாரம் செய்தால் நன்றாக இருக்கும். சாக்லேட் பணியாரம் சாக்லேட் கேக் போல உள்ளிருக்கும் சாக்லேட் உருண்டைகள் உருகி சாக்லேட் லாவா போல வழிந்து வரும்.. பார்க்கும் போதே சாப்பிட தூண்டும்.. அதனால் இந்த சாக்லேட் பணியாரத்தை குழந்தைகள் பள்ளியில் இருந்து வரும் போது மாலை நேரங்களில் செய்து கொடுத்தால் நன்றாக விரும்பி சாப்பிடுவார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த பனியாரத்தை செய்வதற்கு அதிக நேரம் ஆகாது.. நிமிடத்தில் செய்து அசத்தலாம்.