சென்னை: காலையில் சத்தான உணவு சாப்பிட விரும்பினால் வேர்க்கடலை, அவல் சேர்த்து சாலட் செய்து சாப்பிடலாம். உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் இதை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேர்க்கடலை – ஒரு கப்,
ஊற வைத்த கெட்டி அவல் – கால் கப்,
கார்ன் – கால் கப்,
கடுகு – அரை டீஸ்பூன்,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
மாங்காய்த் துண்டுகள், தேங்காய்த் துண்டுகள் – தலா 2 டேபிள்ஸ்பூன்,
சோம்பு, பச்சை மிளகாய் துண்டுகள் – தலா ஒரு டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை: வேர்க்கடலையையும் கார்னையும் வேக வைத்துக் கொள்ளவும். வேக வைத்த வேர்க்கடலை, கார்னையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, அதனுடன் மாங்காய்த் துண்டு, தேங்காய்த் துண்டு, சோம்பு, உப்பு ஆகியவற்றை கலந்து கொள்ளவும்.
எண்ணெயில் கடுகு, பச்சை மிளகாய் தாளித்துக் கொட்டி, கொத்தமல்லி தூவி பரிமாறவும். சூப்பரான வேர்க்கடலை அவல் சாலட் ரெடி.