சென்னை: உடலுக்கு ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கும் அவல் கஞ்சி செய்வது எப்படி என்று தெரியுங்களா? இதை வெல்லம் சேர்த்து அல்லது மோர் சேர்த்து சாப்பிடலாம்.
தேவையானவை:
அவல் – 1 கப்,
பொட்டுக்கடலை,
கசகசா – தலா 1 டீஸ்பூன்,
துருவிய வெல்லம் – 2 டேபிள் ஸ்பூன்,
ஏலத் தூள் – சிறிது,
மோர் – 2 டம்ளர்,
உப்பு,
பெருங்காயம் – சிறிது.
செய்முறை: வெறும் வாணலியில் அவல், பொட்டுக் கடலை, கசகசாவைத் தனித்தனியே வறுத்து ஆறவிட்டு, மிக்ஸியில் ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும். கனமான கடாயில் பாலை விட்டு, காய்ந்தவுடன் அவல் கலவையைச் சேர்த்து கிளறவும்.
பின்னர் ஏலம், வெல்லம் சேர்க்கவும். நன்றாக வெந்தவுடன் இறக்கி ஆறவைத்து பருகலாம். உப்பு கஞ்சி – பொடித்த அவல் கலவையை 2 டம்ளர் சேர்த்து கொதிக்கவிட்டு வெந்தவுடன் இறக்கி, உப்பு, பெருங்காயம், மோர் சேர்த்து கலந்து பருகவும். சிவப்பு அவல் என்றால் மிகவும் நல்லது.