தேவையானவை:
கேழ்வரகு – கால் கிலோ
நெய் – தேவைக்கேற்ப
சர்க்கரை – கால் கிலோ
முந்திரி – 10
ஏலக்காய் தூள் – 1 டீஸ்பூன்
ஜாதிக்காய் தூள் – 1 டீஸ்பூன்
செய்முறை:
கேழ்வரகை முதல் நாள் இரவே ஊறவைக்கவும். மறுநாள் காலை கிரைண்டரில் அரைத்து 4 முறை பால் எடுக்கவும். இந்த பாலை 2 மணி நேரம் வைத்தால் தெளிந்துவிடும். மேலே நீர்த்த தண்ணீரை நிராகரிக்கவும். கடாயில் சர்க்கரையை போட்டு தண்ணீர் ஊற்றி ஜீரா பதத்தில் காய்ச்சவும். அதில் தெளிந்த பால் மற்றும் நெய்யை ஊற்றி கிளறி அல்வா பதம் வந்ததும் ஏலக்காய் தூள், ஜாதிக்காய் தூள், முந்திரி பருப்புகளை தூவி இறக்கவும். சுவையான கேழ்வரகு பால் அல்வா தயார்.