சென்னை: ஆரோக்கியமுள்ள கேழ்வரகு மில்க் ஷேக் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க,
தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு – 1கப்
பாதாம் -4
முந்திரி -5
திராட்சை – 4
பேரீச்சை – 5
காய்ச்சியப் பால் – 1/2 கப்
ஏலக்காய் – 4
சர்க்கரை – தேவையான அளவு
செய்முறை:
முதலில் கேழ்வரகு மாவை தண்ணீர் விட்டு கட்டியில்லாமல் நன்கு கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். பின்பு இதனை கட்டியாக அல்லது கூழ் பதத்திற்கு காய்ச்சி கொள்ளவும்.
பின்பு ஊற வைத்து தோல் நீக்கிய பாதாம், முந்திரி, திராட்சை, பேரீச்சையை சிறிது பால் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
பிறகு காய்ச்சிய கேழ்வரகு மற்றும் பால் இதனுடன் அரைத்த பாதாம் விழுது, ஏலப்பொடி சேர்த்து மேலும் சிறிது நேரம் காய்ச்சி இறக்கவும். அவ்வளவுதாங்க ஆரோக்கியமான கேழ்வரகு மில்க் ஷேக் ரெடி.